உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அரச பேருந்து சேவையில் ஈடுபடாமையால் பாடசாலை மாணவர்கள் அவதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் 6.15 மணிக்கு ஹட்டன் நோக்கி செல்லும் ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து சேவைகள் கடந்த ஒரு வார காலமாக சேவையில் இல்லாததால் சாமிமலை பகுதியில் உள்ள 5 பெருந்தோட்ட தொழிலாளர்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள், 2 கிராமத்தில் உள்ள மக்களின் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பயணிகள், நோயாளிகள் கர்ப்பிணிப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,
எமது அரச பேருந்து நிலையத்தில் போதுமான சாரதிகள் நடத்துனர்கள் மற்றும் பேருந்துகள் பற்றாக்குறை நிலவுகிறது. இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பலன் இல்லை என்று தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி ஹட்டன் அரச பேருந்து நிலைய குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்து தர முன்வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0