உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியில் சின்னப்புல்லுமலை கிராமத்தில் நேற்று (07) இரவு 10.30 மணியளவில் காட்டு யானை தாக்கி 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரி அடையாளம் காட்டியுள்ளனர்.

சின்னப்புல்லு மலை கிராமத்தில் தோட்டத்தில் தங்கி வேலை செய்யும் குறித்த நபர் வழமைபோல் தோட்டத்தின் வாடியில் உறங்கிக் கொண்டிருந்தவேளை குறித்த இடத்துக்கு வந்த காட்டு யானை வாடியை உடைத்துள்ளது. உறக்கத்திலிருந்து விழித்து வாடியிலிருந்து தப்பி ஓடியபோது யானை அவரை துரத்தி தாக்கியுள்ளது. தாக்கியதில் அவர் நிலத்தில் விழுந்தபோது முகத்தில் காலால் மிதித்துள்ளது. யானையின் தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தியதுடன் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0