உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

யாழில் ஆரம்பமாகவுள்ள பொன் அணிகளின் போர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டமானது 109ஆவது ஆண்டாக இம்முறை நடைபெறவுள்ளது.

இது குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது நேற்று மாலை யாழ்ப்பாண கல்லூரியில் நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியில் நாங்கள் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றோம். இந்த இரண்டு பாடசாலைகளும் நட்பினாலே பிணைந்திருக்கின்றார்கள்.

இந்த போட்டியானது மூன்று நாட்கள் தொடராக காணப்படுகின்றது. வியாழன், வெள்ளி மற்றும் சனி (12,13,14) ஆகிய மூன்று தினங்களாக இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. பின்னர் 50 ஓவர் போட்டி ஒன்றும், பின்னர் ரி20 போட்டி ஒன்றும் நடைபெறும்.

இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளின் உறவுகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், நேற்றைய ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0