உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசுக்குச் சுமார் 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமைக்காக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் ஊழல் செய்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மேலாளராகப் பணியாற்றிய காலத்தில், நிறுவனத்தின் களஞ்சியசாலையில் காப்பட் இடும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமான முறையில் வழங்கினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு 88 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டத்தை அவர் ஏற்படுத்தினார் எனக் குறிப்பிட்டு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவருக்கு எதிராக இவ்வாறான ஊழல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0