உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

பாதாள உலகக் குழுத் தலைவர் பட்டுவத்த சாமரவின் மனைவியின் வீட்டுக்கு துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘பட்டுவத்த சாமர’ என்பவரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டுக்கு இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஜா – எல, புனித அன்னாள் வீதியில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு இன்று அதிகாலை 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலுக்கு ரி – 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீடு தற்போது வேறொரு தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது என்று பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

சம்பவம் தொடர்பில் ஜா – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0