உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

யாழ். படைத் தலைமையகம் ஒருபோதும் அகற்றப்படாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

“யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்று பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்து விரிவான விளக்கமளித்தார்.

“யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.” – என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்:

“நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும்.

பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அனைத்துத் தரப்புகளுடனும் விரிவாக ஆராய்ந்த பின்னரே காணி விடுவிப்பு தொடர்பான இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது.” – என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

வடக்கின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, குறைக்கப்படவில்லை என்பதை பாதுகாப்பு அமைச்சின் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0