உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

குளத்தில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அனுராதபுரம், நாச்சாதுவ குளத்தில் தோணி மூலம் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் ஒருவர், மூன்று நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.

நாச்சாதுவ புதிய நகரைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது ஹனீபா முஹம்மது ரஃபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மீன்பிடிப்பதற்காக குளத்துக்குச் சென்ற இவர், அன்றைய தினம் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் குளத்துக்குச் சென்று தேடியபோது, ரஃபீஸ் மீன்பிடிக்கப் பயன்படுத்திய தோணி மட்டும் குளத்தில் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டெடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, மூன்று நாட்களின் பின்னர் அவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0