ஜப்பான் கடற்படைக் கப்பலில் மருத்துவ உதவி தேவைப்பட்டவரை பொறுப்பேற்ற இலங்கை கடற்படை!
கொழும்பிற்கு அப்பால் மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமான “ஜே.எம்.எஸ்.டி.எப். ஒனாமி” என்ற போர்க்கப்பலில் இருந்த ஒருவருக்கு திடீர் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, இலங்கை கடற்படையினர் அவரை பொறுப்பேற்று கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.இலங்கை கடற்படையினர் உடனடியாக அவருக்கு முதலுதவி வழங்கியதுடன், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.