சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்து இளைஞர் படுகாயம்.!
மல்லாவி வடகாடு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற சம்பவத்தில், சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் சகிதன் என்பவரே இச்சம்பவத்தில் காயமடைந்தவராவார்.
காயமடைந்தவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.