உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஜனாதிபதி தலைமையில் விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இரத்மலானை இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.


நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி, முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் அவர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, வான் சாகச நிகழ்வுகளையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் சிறப்பு நினைவுக் குறிப்பை பதிவு செய்த ஜனாதிபதிக்கு, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க நினைவுப் பரிசை வழங்கினார்.

விமானப்படையின் 75 ஆண்டுகால சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்பம் தொடர்பான பல அரங்குகள் இடம்பெற்றுள்ளன. விமானப்படை விமானங்களை அருகில் சென்று பார்வையிடவும், அவற்றின் தொழில்நுட்ப விவரங்களை அறியவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கண்காட்சியில் ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், மோப்ப நாய்களின் நிகழ்ச்சிகள், மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்புக் காட்சிகள், பராசூட் காட்சிகள், அங்கம்பொர சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.


இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இன்று முதல் நாளை வரை, தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.நிகழ்வில் பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0