உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

டிக்கோயா வைத்தியசாலையில் சடலத்திற்கு துஷ்பிரயோகம் – மூன்று ஊழியர்களுக்கு எதிராக விசாரணை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி இன்று (06) விசேட கருத்து வெளியிட்டார்.


அவர் தெரிவித்ததாவது, சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் தினத்தில் இரவு வேளையில் சவ கிடங்கிற்குள் மூன்று ஊழியர்கள் நான்கு தடவைகள் நுழைந்தமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இச்சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, அறிவியல் ரீதியான விசாரணைகளும் பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலங்களை முறையாககுளிரூட்டிகளில் வைக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


குற்றம் உறுதியாகின், குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், வைத்தியசாலை கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைய விடமாட்டோம் என்றும் மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0