உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வுகளை வழங்குமாறு பிரதமர் ஹரிணி வலியுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
47 பார்வைகள்

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ‘இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்’ ஜனாதிபதி செயலணி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.


இக்கூட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிலையான நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இதுவரை கிடைத்துள்ள வெளிநாட்டு உதவிகள் மற்றும் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. ‘டித்வா’ சூறாவளியால் சேதமடைந்த வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் முழுமையான மதிப்பீட்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


தற்போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக இணைந்து தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0