டித்வா சூறாவளி நிவாரண நிதிக்கு ஒலிம்பிக் வீரர்களின் பங்களிப்பு.!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக அரசின் “இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்” நிதியத்திற்கு இலங்கை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ரூபா 5,82,786.18 நன்கொடை வழங்கினர்.
இலங்கை ஒலிம்பிக் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீயானி குலவன்ச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் காசோலையை கையளித்தார்.
இந்நிகழ்வில் நிம்மி டி சொய்சா, சுனில் குணவர்தன, நிலுகா மற்றும் கயில் அபேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
