உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போதைப்பொருள் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் “முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் விஷபோதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு இன்று (06) நடைபெற்றது. இந்நிகழ்வு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி அனுசிக்கா அபேசிங்க தலைமையில் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


அதிபர் அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் தேசிய செயற்திட்டம், தேசிய செயற்பாட்டு சபையின் ஒருங்கிணைப்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனை முன்னிட்டு, மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் பி. தினேஸ் அவர்களால் விஷபோதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விளக்கக் கருத்தரங்கு வழங்கப்பட்டது.


மேலும் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும்விநியோகத்தை கட்டுப்படுத்துதல், அதற்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவித்தல் மற்றும் புனர்வாழ்வு வழங்குதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நிகழ்வின் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஒட்டுப் பலகைகள் வழங்கப்பட்டதுடன், அவை வைத்தியசாலை வளாகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டன.


மேலும் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 1818 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கி, போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் வைத்தியர் லிவிதன், விசேட தர தாதியர் உத்தியோகத்தர்கள், தாதியர் சகோதரிகள், தாதியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

78 0 0