பட்டிப்பளையில் மாதிரி பாலர் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டல்.!
பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மாதிரி பாலர் பாடசாலை ஒன்றை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த மாதிரி பாலர் பாடசாலை, கேமாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. சிறுவர் கல்வி மற்றும் ஆரம்பக் கல்வி வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் இந்த முன்பள்ளி பாடசாலை கட்டப்படுகின்றது.
மாவட்டத்தில் கேமாஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் அமைக்கப்படும் இரண்டாவது சிறுவர் நேய முன்பள்ளி பாலர் பாடசாலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர், மாவட்ட முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர், பிரதேச முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர், மதகுருமார்கள் மற்றும் பாலர் பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
