உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

யாழ். படகு விபத்து: அவசர விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
45 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தத் துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், துயரத்தில் இருக்கும் அந்தக் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

விபத்து தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள அமைச்சர், பின்வரும் விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

  • விபத்துக்குள்ளான படகு பயணத்துக்கு உகந்த நிலையில் இருந்ததா?
  • பயணிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக அமைந்ததா?
  • கடல் பயணத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டனவா?

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை எவ்வித தாமதமுமின்றி தீவிரப்படுத்துமாறும், அதற்காக அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டறிந்த அமைச்சர், அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

78 0 0