உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்; சாரதி, உதவியாளர் போதைப்பொருளுடன் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து சென்ற கனகர வாகனத்தை துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடாத்தி மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவரை நேற்று முன்தினம் புதன்கிழமை(05) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தப்பாலம் பகுதியில் வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர். இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கி சென்றதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து பொலிஸார் துரத்தி சென்ற நிலையில் அந்த வாகனம் அங்கிருந்து வாழைச்சேனை நோக்கி தப்பி ஓடியதையடுத்து வாகனம் வாழைச்சேனையில் திரும்பி அங்கிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணித்தது.

இதனையடுத்து பொலிஸார் குறித்த வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் அங்கு வீதிச் சோதனை தடையை அமைத்து அதனை நிறுத்துமாறு பணித்த போது அந்த தடையை மீறி கனரக வாகனம் மட்டு நகர் நோக்கி தப்பி ஓடியது.

அந்த வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் இரண்டு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

இதனையும் மீறி குறித்த வாகனம் மட்டு நகரை நோக்கி தப்பி ஓடிய நிலையில் மட்டு தலைமையக பொலிஸார் திருகோணமலை வீதி வை’ சந்தி பகுதியில் வீதி சோதனை அமைத்து குறித்த கனரக வாகனத்தை நிறுத்தி மடக்கி பிடித்து சாரதியையும் உதவியாளரையும் கைது செய்தனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்பட்டவர் எனவும் தலைமறைவாகி வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0