உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

எமது நிலம் எவருக்கும் போர்க்களம் அல்ல; நிலம், வான், கடல் எல்லைகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
43 பார்வைகள்

இலங்கையின் நிலம், வான்பரப்பு அல்லது கடல் எல்லைகளை எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றுமொரு தரப்புக்குத் தீங்கு விளைவிப்பதற்கோ பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடிய வேளையில் உரையாற்றிய அவர், நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்.

“எமது அரசு பதவியேற்றபோது, இவர்களுக்கு சர்வதேச உறவுகளை கையாளத் தெரியாது என்றும், ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தத் தகுதியற்றவர்கள் என்றும் விமர்சித்தார்கள். சர்வதேச நாணய நிதியம் நாட்டை விட்டு வெளியேறிவிடும் எனக் கூறினார்கள். ஆனால், இன்று எமது ஜனாதிபதியின் இராஜதந்திரத்தையும், சர்வதேச சமூகம் எமது அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் கண்டு அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஈரான் – அமெரிக்கா மோதல் போன்ற சர்வதேசப் பிரச்சினைகள் முழு உலகையும் பாதிக்கின்றன. உலகில் எங்கு போர் நடந்தாலும் பாதிப்பு மனித உயிர்களுக்குத்தான். அதனால்தான் எமது ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் எப்போதும் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசின் தன்னம்பிக்கையும் மனச்சாட்சியும் மிகப்பெரியது. சர்வதேச சட்டங்கள் மற்றும் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் எப்போதும் நடுநிலையான நாடாகவே செயற்படுவோம். பிற நாடுகளின் மோதல்களுக்காக எமது வளங்களைப் பயன்படுத்த இடமளிக்க மாட்டோம்.

மனிதாபிமானத்தை முன்னிறுத்தி, எந்தவொரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடுநிலையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0