உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு; ஆறு துணை நிறுவனங்கள் உருவாக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0