எரிபொருளை பதுக்கிய நபர் கைது.!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையில் நேற்று முன்தினம் 500 லீற்றருக்கு மேற்பட்ட மண்ணெண்ணையை பதுக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் பதுக்க பயன்படுத்திய வாகனமும் பருத்தித்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அதிகளவான மண்ணெண்ணையை வியாபார நடவடிக்கைக்காகவோ அல்லது வேறு தேவைக்காகவோ பயன்படுத்துவதற்கு வாகனத்தின் மூலம் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகாமையில் இருந்து கடத்த முயன்ற போது பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த வாகனத்துடன் சந்தேக நபரையும் உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அவரது வாகனம் மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இன்றைய தினம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.
