உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கெசல்வத்த தினூஷ தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு; உதவிய சந்தேகநபர் விளக்கமறியலில்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ்.போதரகம நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு – கெசல்பத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இஷார பஹல கலகே என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை, கப்பம் கோருதல், கொள்ளை மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ‘கெசல்வத்த தினூஷ’ என்றழைக்கப்படும் ஹேவாபேடிகே தினூஷ சதுரங்க, சுமார் மூன்று ஆண்டுகளாக டுபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், அண்மையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

‘கெசல்வத்த தினூஷ’ கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ‘இஷார பஹல கலகே’ என்ற பெயரிலான போலிக் கடவுச்சீட்டு இருந்தமை கண்டறியப்பட்டது. அந்தக் கடவுச்சீட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்தனர். அத்துடன், பிரதான சந்தேகநபரான ‘கெசல்வத்த தினூஷ’ தற்போது கொம்பனித்தெரு பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்றும், அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள ஏனைய குற்றவியல் வழக்குகள் குறித்தும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0