உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கெஹெல்பத்தர பத்மேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கொழும்பு நீதிவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களுக்கு ஆதரவளித்ததாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதி வழங்கினார்.

பாதாள உலகக் குழு உறுப்பினர் எனக் கருதப்படும் கெஹெல்பத்தர பத்மே, ஏற்கனவே 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மேலும் 90 நாட்களுக்கு அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்று நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் நிரோஷன் உதித் உதயசாந்தவுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த மேலதிக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியிருந்தது. இதனைக் கருத்திற்கொண்ட நீதிமன்றம், சந்தேகநபரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0