உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தவிக்கும் இலங்கையர்களை உடனே தேடிக் கண்டறியுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடும் உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் யுத்தச் சூழ்நிலை காரணமாக அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


தூதரகங்கள் மூலம் 24 மணிநேர அவசர சேவை மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன என்றும், அவை வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரை பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டது.சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், நாடு திரும்ப முடியாமல் உள்ளவர்களை மீண்டும் அழைத்து வர தேவையான வசதிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.விமான சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதால் தேவையான வசதிகளை வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0