டிட்வா தொடர்பான ஆய்வுகளுக்கு விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்.!
சூறாவளி ‘டிட்வா’ தொடர்பான போதிய தயார்நிலை இன்மை குறித்து முழுமையான ஆய்வு நடத்தி, அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் பிரசன்ன குணசேன, அன்டன் ஜெயக்கொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி குமாரி விஜேரத்ன, எம்.கே.எம். அஸ்லம், அனுஷ்கா திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாபாலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு அனர்த்த முகாமைத்துவத்தில் ஏற்பட்ட குறைபாடுகளை ஆராய்ந்து, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.