உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரானின் கப்பலை பொறுப்பேற்க இலங்கை தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

கொழும்பை அண்மித்த கடற்பரப்பில் நிலைகொண்டிருந்த ஈரானின் இரண்டாவது கப்பலை இலங்கை பொறுப்பேற்று திருகோணமலைக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், என்ஜின் ஒன்று செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் கப்பலை துறைமுகத்திற்குள் கொண்டுவராமல், திருகோணமலைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார்.


இது யாருக்கும் போர் ரீதியான உதவி அல்ல என்றும், மனித உயிர்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகள் அடிப்படையில், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதையும், எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். அமைதியை விரும்பும் நடுநிலையான நாடாக மனிதாபிமான அடிப்படையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசுக்கு எதிராக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும், கப்பலில் சிறுவர்கள் இருப்பதாக கூறப்பட்ட செய்திகள் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0