உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரான் ஆன்மீகத் தலைவர் கமேனியின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் இரங்கல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


இன்று கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு விஜயம் செய்த ரிஷாத் பதியுதீன், அங்குள்ள ஈரானிய தூதுவர் அலிடெர்ஷா டெல்கொஷ்வை நேரில் சந்தித்து தனது அனுதாபங்களை தெரிவித்தார்.அத்துடன், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.


இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர் மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்தாஹீர் மரிக்கார் ஆகியோரும் கலந்து கொண்டு தமது இரங்கல்களை பதிவு செய்தனர்.


ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதன் ஆன்மீகத் தலைவரின் மறைவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

70 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0