உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஏப்ரல் மாத இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.

இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர் மேலும் உறுதியளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0