கொக்கோ, மிளகு, ஏலக்காய் செய்கையாளர்களுக்கு நாளாந்தக் கொடுப்பனவு வழங்க தீர்மானம்.!
கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு நாளாந்தம் ரூபா 1,920.58 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி, தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டீ. என். கே. வடயலித்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி மாத வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனுடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளை மீண்டும் ஆரம்பிக்க ஒரு ஹெக்டேயருக்கு ரூபா 425,000 வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.