இலங்கை தாதியர் சபைக்கு நவீன அலுவலகக் கட்டடம் அமைக்க அமைச்சரவை அனுமதி.!
இலங்கையில் 45,000-க்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் துறை தாதியர்களைப் பதிவு செய்து நிர்வகிக்கும் இலங்கை தாதியர் சபை கடந்த 15 ஆண்டுகளாக போதிய இடவசதியின்றி இயங்கி வந்துள்ளது.இந்த நிலையைத் தீர்க்கும் வகையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சொந்தமான பட்டப்படிப்பு அடிப்படைப் பாடசாலை வளாகத்திலிருந்து 35 பேர்ச் காணியை நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்த இடத்தில் தாதியர் சபைக்கான நவீன அலுவலகக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. புதிய கட்டடம் அமைக்கப்பட்டதும், சபையின் நிர்வாக மற்றும் சேவை நடவடிக்கைகள் மேலும் சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.