உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

“அமெரிக்க ஜனாதிபதியை கண்டு அரசு அஞ்சுகிறதா?” – ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைக் கண்டு அஞ்சுகின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரமழான் நோன்பு என்பது இலங்கை முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமான ஆன்மீக கடமையாகும். இந்நிலையில், நோன்பு காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதில் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.அமெரிக்க ஜனாதிபதி மற்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகின்றார் என்றும், உலக நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகின்றார் என்றும் அவர் விமர்சித்தார்.


இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்த விவகாரத்தில் வேறுபட்ட நிலைப்பாடு எடுத்திருக்கும் என்றும், தற்போது அமைதியாக இருப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.அமெரிக்க ஜனாதிபதியை அஞ்சியதால்தானா அரசாங்கம் மௌனம் காக்கிறது எனவும் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் வினவினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

76 0 0