உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தரம் குறைந்த நிலக்கரியால் 8,497 மில்லியன் ரூபாய் நட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தற்போதைய அரசு தென்னாபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரி தரம் குறைந்தவை என்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதனால் நாட்டுக்கு 8,497 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியுடன் ஒப்பிடும்போது, தென்னாபிரிக்க நிலக்கரி தரம் குறைந்தது என்பதை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

எதிர்பார்க்கப்படும் 5900 – 6200 மட்டத்தை தென்னாபிரிக்க நிலக்கரி எட்டத் தவறிவிட்டது.

ரஷ்ய நிலக்கரி ஒரு கிலோவாட் மணிக்கு 0.46 கிலோ சாம்பலை உருவாக்கும் நிலையில், தென்னாபிரிக்க நிலக்கரி 0.93 கிலோ சாம்பலை உருவாக்குகின்றது. இது 102 வீத அதிகரிப்பாகும்.

தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் லக்விஜய (நுரைச்சோலை) மின் உற்பத்தி நிலையத்தில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அங்கு 300 மெகாவாட் முழுமையான மின் உற்பத்தியை எட்ட முடியாமல் உள்ளது. அதிக சாம்பல் மற்றும் வெப்பநிலை காரணமாக கொதிகலன்கள் மற்றும் ஏனைய இயந்திரப் பாகங்கள் விரைவாகத் தேய்மானமடைகின்றன.

ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 9 கப்பல் நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை மறைக்கவே, அரசு தற்போது அவசரமாக மீண்டும் 5 நிலக்கரி கப்பல்களை (தலா 60,000 தொன்) கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது. இது தரமின்மையை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகும்.

நாட்டுக்கு வருடத்துக்கு 6 நிலக்கரி கப்பல்கள் தேவைப்படும் நிலையில், இவ்வாறான தரம் குறைந்த இறக்குமதிகள் மூலம் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் இதனை மறுத்தாலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தரவுகள் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளன. இதற்கு அரசு நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0