உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரான் விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தர்ப்பவாத அரசியல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இலங்கை அரசு மௌனம் காப்பது பாரதூரமானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற சபை அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அது இலங்கைக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அங்கு பணிபுரியும் 10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கும்.

முன்னர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியவர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் மௌனமாக இருப்பது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகின்றது. அரசு சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டது.

ஈரான் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் பலவும் கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில், இலங்கை ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நாடாளுமன்றத்தில் முன்வைக்கவில்லை. இது இலங்கையின் நீண்டகால மற்றும் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கைக்கு முரணானது.

ஜனாதிபதி இக்கட்டான இந்தச் சூழலில் நேரடியாகப் பேசாமல், அமைச்சர்கள் கூற வேண்டிய சாதாரண விடயங்களையே நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்றார்.” – என்று முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0