உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு.டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக நேற்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று (04.03.2026) பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார்.

அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் இன்று மட்டும் 310,200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும், இவ் விநியோகம் தொடர்பில் வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன பிராந்திய முகாமையாளர் திரு. சிவகரன் அவர்களுடன் அரசாங்க அதிபர் தொடர்பு கொண்டு, இன்றைய விநியோக நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார். அதன் பிரகாரம் வட பிராந்திய முகாமையாரால் விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் விடயம் தொடர்பில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0