உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

சர்வதேச அதிக உடல் எடை தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று நடைபெற்றன.

உடல் எடையை கட்டுப்படுத்துவோம் வாழ்வினை காப்போம் என்னும் தொனிப்பொருளில் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தொற்றா நோய்ப் பிரிவின் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ருதேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடம் வரையில் சென்று அங்கிருந்து தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்று விழிப்புணர்வு வீதி நாடகம் நடாத்தப்பட்டது.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினால் இந்த வீதி நாடகம் நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து ஊர்வலமானது மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வரையில் வருகை தந்தது.

இந்த விழிப்புணர்வு நடைபவனியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய மாணவர்கள், தாதிய விரிவுரையாளர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் உடல் எடை அதிகரிப்பினால் எதிர்நோக்கப்படும் பல்வேறு வகையான அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றதை காணமுடிந்தது.

இதன்போது உடல் எடை அதிகரிப்பினால் ஏற்படும் நோய்களின் தாக்கங்கள், அவற்றினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள், தினமும் உடல் எடையினை குறைப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள், மருத்துவ முறைகள் குறித்து அறிவுப்புகள் வழங்கப்பட்ட வகையில் நடைபவனி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0