உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கோர விபத்து; போக்குவரத்து பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

கொழும்பு – பிலியந்தலை வீதியின் ரத்தனபிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக அந்த வீதியில் தற்போது பாரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறிய லொறியும் பாடசாலை பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மோதிய வேகத்தில் குறித்த வாகனங்கள் வீதியோரமாக இருந்த மின் கம்பம் ஒன்றிலும் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக 120 ஆம் மைல்கல் வீதியில், பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிய திசையிலான வாகனப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மின் கம்பத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் மின்சார சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0