உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சர்வதேச கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புதிய சட்டமூலம் குறித்த கவலை
தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு மற்றும் நல்லிணக்கம்
இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், அந்தச் செயல்முறை மிகவும் மந்த கதியில் உள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள எலினோர் சாண்டர்ஸ், இது நல்லிணக்கத்துக்கு மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் கள யதார்த்தமும்
நிலைமாறுகால நீதி, இனவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளைக் குழு கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், களத்தில் அதன் முடிவுகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள ‘சுயாதீன அரச வழக்குதொடுநர் அலுவலகம்’ வெறும் பேச்சளவில் இன்றிச் செயற்பாட்டுக்கு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகளும் நீதியும்
மோதல் காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள குழு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நீதி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜூன் மற்றும் செப்டெம்பர் கூட்டத்தொடர்களிலேயே இலங்கை குறித்த விரிவான எழுத்துபூர்வ அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், மார்ச் மாதம் நடைபெறும் இந்த 61ஆவது கூட்டத்தொடரில், இணை அனுசரணைக் குழு ஒரு “வாய்மொழி மூல அறிக்கை”யைச் சமர்ப்பித்துள்ளமையானது, இலங்கையைச் சர்வதேசக் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கச் சர்வதேச சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பதைக் காட்டுகின்றது.

விவாதங்கள் இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு கூட்டத்தொடரில், இவ்வாறானதொரு விரிவான மற்றும் விமர்சன ரீதியான அறிக்கை முன்வைக்கப்பட்டிருப்பது, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிரதான கூட்டத்தொடருக்கான ஒரு “முன்னெச்சரிக்கை அறிவிப்பாகவே” கருதப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0