நாவலப்பிட்டியில் மகளிர் தினம் சிறப்பாக நடாத்தத் திட்டம்.!
சுயசக்தி நிறுவனம் 2026ஆம் ஆண்டிற்கான மகளிர் தின நிகழ்வை நாவலப்பிட்டி பகுதியில், கங்கேஹில பிரதேச செயலகம் வரம்பிற்குட்பட்ட அலுகொல்லைத் தோட்டத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. அ. செல்வராஜ் தெரிவித்துள்ளார்.அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கை அனுபவங்களையும், அவர்களின் மகிழ்ச்சிகரமான கலாசார அம்சங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக ஒழுங்கமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற பேரிடர் அனர்த்தத்திற்குப் பின்னர் மலையகப் பெண்களின் மேம்பாடு மற்றும் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை முன்னெடுக்கத் தேவையான திறன்களை வெளிப்படுத்தும் களம் அமைத்து வழங்குவது குறித்து அப்பகுதி மக்களுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதையும்அவர் சுட்டிக்காட்டினார்.மகளிர் சமூகத்தின் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.