களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு 25 இலட்சம் மதிப்பிலான கண் பரிசோதனை கருவி வழங்கி வைப்பு.!
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், கொமர்ஷல் வங்கியினால் சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன கண் பரிசோதனை கருவி ஒன்று இன்று (03) வழங்கப்பட்டது.வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வங்கியின் உயரதிகாரிகள் கலந்து கொண்டு குறித்த கருவியை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இந்நவீன கண் பரிசோதனை கருவி மூலம் வைத்தியசாலைக்கு வருகை தரும் கண் நோயாளிகளுக்கு துல்லியமான மற்றும் விரைவான பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு தரமான மற்றும் மேம்பட்ட சுகாதார சேவைகளை வழங்க இயலும் என்றும், கண் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் இக்கருவி பெரிதும் உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.