உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், இந்தப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர சர்வதேச நாடுகள் தலையிட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மத்திய கிழக்கில் போர் மூண்டுள்ள நிலையில், அதன் நேரடித் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளன. இந்தப் போர் நிலைமை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். அதனை உறுதிப்படுத்த ஏனைய உலக நாடுகள் உடனடியாகத் தலையிட்டு மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என அவர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
குறித்த கைதுக்கான காரணம் தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டார். ‘நிச்சயமாக அந்தக் கைதுக்கு ஒரு காரணம் இருக்கும். அது தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

குறித்த கைது நடவடிக்கையானது ஒரு அரசியல் பழிவாங்கல் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து வினவிய போது,
‘அவ்வாறு இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இன்று அரசியல் பழிவாங்கல்கள் சர்வசாதாரணமாக இடம்பெறுகின்றன’ என அவர் பதிலளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

57 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

71 0 0