உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலையகம் 200 நடைபயணத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட எமது மலையக மக்கள், 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணி மற்றும் நில உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இவர்களும் இந்த நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில், அவர்களுக்குரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், இம் மக்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்வதற்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாக “மலையகம் 200” நடைபயணம் அமைந்தது.

2022.07.28 அன்று தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை 280 கிலோமீற்றர் தூரம், 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த நடைபயணம் மலையக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகப் பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் சில கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து இதனை சமய நிகழ்வாக நடத்தத் திட்டமிட்டிருந்த போதிலும், மலையக மக்களின் வாழ்வாதார மற்றும் உரிமைப் பிரச்சினைகள் தாக்கம் உள்ளதாக வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆய்வாளர்கள் முன்வந்தனர்.

அவர்களின் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம், அனைவரின் பங்களிப்புடனும் இந்த நடைப்பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

280 கிலோமீற்றர் தூரம் நடப்பது எளிய காரியம் அல்ல. நடையாளர்களைத் தெரிவு செய்வதிலும், அவர்களைத் தயார்படுத்துவதிலும் பல சவால்கள் இருந்தன. பிரிடோ நிறுவனம் 20 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் என மொத்தம் 50 பேரை முழு நேர நடையாளர்களாகத் தெரிவு செய்து இந்த முயற்சியை முன்னெடுத்தது.

இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தாலும், இந்த நடைபயணத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக சில சிரேஷ்ட பிரஜைகளின் உணர்வுபூர்வமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

பிச்சை சந்தியாகு லோகநாதன், பெருமாள் கணேசன், முருகன் கணேசன் மற்றும் ஆறுமுகம் வேலு ஆகியோர் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பு இந்த நடைபயணத்தின் அச்சாணியாக அமைந்தது.

இன்றைய சூழலில் பல உரிமைப் போராட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு குறைந்து காணப்பட்டாலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் உரிமைக்கான போராட்டங்களுக்கும் நீண்ட காலமாக உழைத்து வரும் சிரேஷ்ட பிரஜைகளின் பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்றாகும்.

அவர்களைப் பாராட்டி கௌரவிப்பது எமது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கடந்த வாரம் பிரிடோ நிறுவனம் தோட்டங்களில் இயங்கும் சமூக அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்காக ஹட்டனில் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கின் போது, மேற்கண்ட சிரேஷ்ட பிரஜைகள் மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் அவர்கள் கௌரவிப்பை வழங்கியது நிகழ்வின் சிறப்பு அம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

55 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0