உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கொழும்பில் வழமைக்குத் திரும்பிய எரிபொருள் விநியோக நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

கொழும்பு நகரின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வாகன வரிசைகள் தற்போது மறைந்துள்ளன என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் தடையின்றி எரிபொருளைப் பெற்று வருகின்றன.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி. ஆகியன போதுமான அளவு கையிருப்புகளை சந்தைக்கு விடுத்துள்ளதால் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.

தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமிக்க முயற்சித்த நபர்கள் மற்றும் சில முச்சக்கர வண்டி சாரதிகளினால் ஏற்பட்ட குழப்ப நிலைமையை அதிகாரிகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

அரசின் முறையான விநியோக முகாமைத்துவம் காரணமாக கொழும்பு நகரின் எரிபொருள் விநியோகம் ஸ்திரமடைந்துள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகமும் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதிகாலை வேளைகளில் முன்பதிவு செய்யும் நுகர்வோருக்கு அன்றைய தினமே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளுக்கே விநியோகிக்கப்படுகின்றன.

விநியோகத்தில் எவ்வித பாரிய தாமதங்களும் இதுவரை பதிவாகவில்லை என வெள்ளவத்தை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் கொழும்பில் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகக் கட்டமைப்பு தற்போது வலுவான நிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0