உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் ‘வீர வனிதையர்’ விருது விழா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

46 ஆண்டுகால கலைப் பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம், அதன் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இரண்டாவது ஆண்டாக வழங்கும் ‘வீர வனிதையர்’ விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், கொழும்பு – 11, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் இவ்விழா மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.

இவ் விழாவில் பிரதம அதிதியாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொள்கின்றார்.

நிகழ்வுக்கு முன்னிலை வகிக்கின்றார் பிரபல தொழில் அதிபர் பி.எஸ்.செல்வரட்ணம்.

சிறப்பு அதிதியாக தமிழகம் புதுக்கோட்டை தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தியும், கெளரவ அதிதிகளாக மேலும் பலரும் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் தின விழாவில் வழங்கப்பட்டது போல் இவ்வாண்டும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணங்களும், துப்புரவுத் தொழிலாளருக்கு சாறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.

நிகழ்வின் பிரதான அம்சமாக கலை, இலக்கியம், ஊடகம், சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டுவரும் பெண்கள் 20 பேருக்கு வீர வனிதை விருதும் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளது.

பல்வேறு கலைக் கதம்ப நிகழ்ச்சிகளும். ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று மகளிர் அணி நிர்வாகம் அறிவிக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0