உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தகாத உறவால் தாதிக்கு நேர்ந்த விபரீதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அரநாயக்க வைத்தியசாலையில் பணியாற்றிய ஒரு பிள்ளையின் தாயான தாதி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கள்ளக்காதலனை, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அரநாயக்க, நிக்கபிட்டிய பகுதியைச் சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் 33 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அரநாயக்க வைத்தியசாலையில் பணிபுரிந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற தாதியே உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது,
உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து, ஏழு வயதுடைய மகனுடன் தீப்பிட்டிய பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதன்போது, சந்தேகநபருடன் அவர் தகாத உறவைப் பேணி வந்தார் என்று கூறப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிய தாதி, சந்தேகநபர் தனது வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு அச்சமடைந்து, உடனடியாக அருகிலுள்ள வீட்டுக்குத் தப்பியோடியுள்ளார்.

அவரைத் துரத்திச் சென்ற சந்தேகநபர், அண்டை வீட்டு வாசலில் வைத்து அவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். தர்க்கம் முற்றிய நிலையில், சந்தேகநபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாதியின் நெஞ்சுப் பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரநாயக்க வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியுடன் சந்தேகநபர் அன்றிரவே கைது செய்யப்பட்டார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் மாவனல்லை பதில் நீதிவான் நிஷேதா குமாரி கருணாதிலக்க சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

உயிரிழந்த தாதியின் சடலத்தைக் கேகாலை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து, உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0