உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அனுர அரசிலும் தொடரும் இனவழிப்பு; நீதி கோரி ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நிறைவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய துவச்சக்கரவண்டி பயணமானது பல நாடுகளை கடந்து இன்றையதினம் ஜெனீவா ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகள் சபைக்கு முன்பாக இன்று நிறைவடைந்துள்ளது. 18 நாட்களாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு பயணம் தொடர்பாக பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரச பயங்கரவாதத்தால் எமது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்புக்கு நீதிகோரி சர்வதேச நாடுகள் எங்கும் எமக்கான நீதியை கோரி போராடி வருகின்றோம்அந்த வகையில் பல நாடுகளை கடந்து பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈறுளிப்பயணமானது கொலண்ட், பெல்ஜியம் ஜேர்மனி,பிரான்ஸ்,சுவிஸ் ஊடாக இன்றைய நாளில் ஜெனீவாவில் நிறைவு பெற்றுள்ளது

இந்த மனிதநேய ஈறுளிப்பயணமானது பல சர்வதேச நாடுகளின் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வரும்போது அந்தந்த நாடுகளில் இருந்த மனிதநேயச்செயற்பாட்டாளர்கள் இணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் அவர்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை எமது மக்களுக்காக போராட வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.எமது வடக்கு கிழக்கு தமிழர்தேசம் திட்டமுட்டு அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றதுஎங்களுடைய தழிழீழ நில தாயகக்கோட்பாடு இன்று கிவில்ஓயா திட்டத்தினூடாக பிரிக்கப்படவுள்ளது அதனை சிங்களபேரினவாத அநுரஅரசு முன்னெடுக்கின்றார்கள் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0