உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மக்களின் காணிகள் விடுவிப்பு நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர் கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வனவளத் திணைக்களமும் வனஉயிரிகள் திணைக்களமும் மக்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ள வாழ்விடக் காணிகளையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.


தேசிய சுற்றுச்சூழல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்தியின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன் வரவேற்புரையாற்றிய பின்னர் உரையாற்றிய ஆளுநர், தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்தை நோக்கி பல முதலீட்டாளர்கள் வருகை தருவதாகவும், எனினும் அவர்கள் தேவையான அனுமதிகளைப் பெறுவதில் பல நிர்வாகத் தடைகள் மற்றும்நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்கொள்கின்றனர் என்றும் குறிப்பிட்டார். அனுமதி வழங்கும் நடைமுறைகளை விரைவுபடுத்தாவிட்டால் முதலீட்டாளர்கள் விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படலாம் என அவர் எச்சரித்தார்.


மேலும் உரையாற்றிய ஆளுநர், சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் வனவளத் திணைக்களமும் வனஉயிரிகள் திணைக்களமும் வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார். போர்க்காலத்தில் மக்கள் இடம்பெயர்ந்திருந்த காலப்பகுதியில், உரிய கள ஆய்வுகள் மற்றும் மக்கள் கலந்துரையாடல்கள் இன்றி வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் பல காணிகள் கையகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார். அந்த நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தி, மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் விரைவில் மீள வழங்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0