நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை -அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை.!
இன்றையதினம் (02) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும். காற்று மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீட்டர் வரை காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கடற்பரப்புகள் மிதமான அலைச்சலுடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.