உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ரமழான் நோன்பு காலம்: கிழக்கில் சிற்றுண்டி விற்பனை உச்சம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

புனித நோன்பு காலத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் பல்வேறு ருசிகரமான சிற்றுண்டிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், பொதுமக்களும் அவற்றை ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.குறிப்பாக கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டம் பகுதிகளில், முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் இவ்விற்பனை அதிகரித்துள்ளது. பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் நோன்பு திறப்புக்கான சிற்றுண்டி விற்பனை பரவலாக நடைபெறுகிறது.

கோழி, முட்டை, மாட்டு இறைச்சி சமோசா, ரோல்ஸ், பற்றீஸ், பருப்பு வடை, இறால் வடை, உளுந்து வடை, பேஸ்டி, சுருட்டு அப்பம், வண்டப்பம், சாண்ட்விச், தயிர் வடை, மாசி வடை, கட்லட், பீசா, பர்கர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்கள் வெகுவாக விற்பனையாகின்றன.பெப்ரவரி 19ஆம் திகதி தொடங்கிய புனித நோன்பு காலத்தைத் தொடர்ந்து இச்சிற்றுண்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குடும்பங்களும், நிறுவனங்களும், அமைப்புகளும் கூட்டாக நோன்பு திறப்பதற்காக பெருமளவில் கொள்வனவு செய்வதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த சிற்றுண்டிகள் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகின்றன. கண்ணாடி அலமாரிகளில் அழகாக அடுக்கி வீதியோரங்களில் விற்பனை செய்யப்படுவது மக்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.இந்நிலையில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் அலுவலகம் ஆலோசனையின் பேரில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


பொலித்தீன் பயன்பாட்டைத் தடை செய்தல், பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை நிறுத்துதல், கையுறை மற்றும் தொப்பி அணிதல் கட்டாயம், மருத்துவ சான்றிதழ் பெறுதல், உணவுத் தயாரிப்பு இடங்களைச் சுத்தமாக பராமரித்தல், ரமழான் காலத்தில் மட்டும் விற்பனை செய்பவர்கள் சுகாதார அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.இந்நடவடிக்கைகளை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

50 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

59 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

67 0 0