உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குவைத் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில், அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானின் தாக்குதல்கள் இடம்பெற்ற போதிலும், குவைத்தில் உள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதைத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் குவைத்தில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையில் உள்ள அவர்களது உறவினர்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தைக் கருத்திற்கொண்டு தூதுவர் பின்வரும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அச்சம் வேண்டாம்
இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இது குறித்து அநாவசியமான அச்சம் கொள்ளத் தேவையில்லை.

தொடர் கண்காணிப்பு
நிலைமையை இலங்கைத் தூதரகம் மிகவும் அவதானத்துடன் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விவகாரங்கள் தொடர்பில் குவைத் பாதுகாப்புப் பிரிவினருடன் தூதரகம் நேரடித் தொடர்பில் உள்ளது. ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால் உடனடியாகக் குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடியான சூழலில், அங்குள்ள சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து இராஜதந்திர நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குவைத் தூதுவர் லக்ஷித ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

50 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

59 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

67 0 0