உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பை மறுக்க முடியாது – ஹர்ஷ டி சில்வா.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
42 பார்வைகள்

“நாட்டின் பொருளாதார மீட்சியில் முன்னைய அரசின் பங்களிப்பும் உள்ளது. அதை எவரும் மறுதலிக்க முடியாது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அவர் வழங்கிய நேர்காணலில், தற்போதைய அரசு முன்னெடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டியிருந்தார். எனினும், முன்னைய அரசின் பங்களிப்பு குறித்து எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, இலங்கையில் பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கான அடித்தளம் கடந்த ஆட்சிக்காலத்திலேயே அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். முன்னைய அரசின் பங்களிப்பை அங்கீகரிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும் அவர் தெரிவிக்கையில், “எழுபது வீதமாக உயர்ந்திருந்த பணவீக்கம் மிக விரைவாக இரண்டு வீதமாகக் குறைக்கப்பட்டது.

எதிர்மறை ஏழு வீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி ஐந்து வீதமாக உயர்த்தப்பட்டது. இவை சாதாரண விடயங்களல்ல” என்றார்.
பொருளாதார மீட்சி என்பது ஒரே அரசின் சாதனையாக அல்லாது, தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாகும் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0