உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சவால்களைக் கண்டு அஞ்சும் தலைவர் நாமல் எம்.பி. அல்லர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. எந்நாளும் சவால்களைக் கண்டு அஞ்சும் ஒரு தலைவர் அல்லர்” என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து, கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இவ்வாறான எதிர்ப்புகள் அன்று பலமாக இருந்தன. அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவர் தனது பயணங்களை வெற்றிகரமாக முன்னெடுத்தார். அதேபோன்றதொரு சூழல்தான் தற்போது நாமல் ராஜபக்ஷவுக்கும் ஏற்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, அங்குள்ளவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே அவர் லண்டனுக்குப் பயணமானார்.

நாமலின் உரைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி இங்கே சிலர் மகிழ்ச்சியடையலாம். ஆனால், கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என்று தெரிந்தே லண்டனுக்குச் சென்ற அவரது தற்துணிவைப் பாராட்ட வேண்டும். அவர் எதற்கும் பின்வாங்கும் தலைவர் அல்லர். சவால்களை எதிர்கொள்ளும் பலம் அவரிடம் இருப்பதால்தான் அவர் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.

தமிழ்ச் சமூகத்துடனும் மாணவர்களுடனும் திறந்த மனதுடன் விவாதித்து, உண்மை நிலையை விளக்கவே அவர் லண்டன் சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்புத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய தடைகள் நாமலின் அரசியல் பயணத்தையோ அல்லது கட்சியின் வீச்சையோ எவ்விதத்திலும் பாதிக்காது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0